"கூட்டணியில் பெரிய கட்சி, சிறிய கட்சி கிடையாது" - பொன் ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சர்

"அப்படி பார்த்தால் கூட்டணியாக இருக்காது"
x
ஒரு கூட்டணி அமையும் போது எந்தக் கட்சி பெரிய கட்சி எது சிறிய கட்சி என எடை போட்டு பார்க்க கூடாது என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். கன்னியாகுமரி மாவட்டம் அழகிய மண்டபம் பகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், தற்போது கூட்டணியை அணு அணுவாக பேசி இணைத்து மிகப் பெரிய வெற்றி கூட்டணியை அமைத்துள்ளதாக குறிப்பிட்டார்,  தான் இங்கு வெற்றி பெற்றால் அந்த வெற்றிக்குதேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் தான்  காரணம் என்றும் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்,

Next Story

மேலும் செய்திகள்