தேமுதிகவுக்கு பதிலாக திமுக என கூறிய அமைச்சர் செல்லூர் ராஜு

அமைச்சர் செல்லூர் ராஜூ தேமுதிக மாவட்ட செயலாளர்கள் என்பதற்கு பதிலாக திமுக மாவட்ட செயலாளர்களே வருக என்றதால் சிறிய சலசலப்பு ஏற்பட்டது.
x
மதுரை புதூர் பகுதியில் அதிமுக தேர்தல் அலுவலக பணிமனையை அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்துவைத்தார். இதனை தொடர்ந்து, கூட்டணி கட்சி நிர்வாகிகளை வரவேற்ற அவர், அதிமுக வேட்பாளர் ராஜ் சத்யனை வெற்றி பெறச்செய்யுமாறு கேட்டுக்கொண்டார். இதனிடையே பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது, அமைச்சர் செல்லூர் ராஜூ  தேமுதிக மாவட்ட செயலாளர்கள் என்பதற்கு பதிலாக ,  திராவிட முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர்களே வருக என்றதால் சிறிய சலசலப்பு ஏற்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்