புதுச்சேரி நாடாளுமன்ற காங். வேட்பாளர் வைத்திலிங்கம் இன்று வேட்புமனுத்தாக்கல் என தகவல்

புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதால் தனது சட்டமன்ற சபாநாயகர் பதவியை வைத்திலிங்கம் ராஜினாமா செய்துள்ளார்.
புதுச்சேரி நாடாளுமன்ற காங். வேட்பாளர் வைத்திலிங்கம் இன்று வேட்புமனுத்தாக்கல் என தகவல்
x
புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதால் தனது சட்டமன்ற சபாநாயகர் பதவியை வைத்திலிங்கம் ராஜினாமா செய்துள்ளார். 

தனது இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதால் சட்டமன்ற சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்ததாக தெரிவித்தார். இன்று வேட்புமனுத்தாக்கல் செய்ய உள்ளதாகவும் கூறினார்.

நீண்டகால மாநில அரசியலில் இருந்ததன் காரணமாக பொதுமக்களின் ஆதரவை நிச்சியமாக பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளதாக தெரிவித்தார். மக்கள் வாய்ப்பு அளித்தால் நாடாளுமன்றத்தில் மாநில மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தக்கூடிய நல்ல வாய்ப்பு இருக்கும் என்றும் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்