"இந்தியாவே வியக்கும் கூட்டணி அதிமுக கூட்டணி" - முதலமைச்சர் பழனிசாமி

சேலம் மாவட்டம், கொண்டலாம்பட்டியில் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.
x
சேலம் மாவட்டம், கொண்டலாம்பட்டியில் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில் சேலம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சரவணனை அறிமுகப்படுத்தி, முதலமைச்சர் பழனிசாமி பேசினார். அப்போது, மக்களவை தேர்தலில், தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியாவே வியக்கும் வகையில் அதிமுக கூட்டணி அமைத்துள்ளதாக அவர் கூறினார். திமுக கூட்டணி சுயநல கூட்டணி என்ற அவர், சுயநலவாதிகளின் சதியினால் 18 சட்டமன்ற உறுப்பினர்களுக்காக இடைதேர்தலை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்ப்பட்டுள்ளது என்றார்.அதிகாரத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்யும் கட்சி திமுக எனவும் அவர் விமர்சித்தார்.

Next Story

மேலும் செய்திகள்