நாடாளுமன்ற தேர்தல் : பிரசார வாகனங்களை உருவாக்கும் பணி தீவிரம்...

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பிரசார வாகனங்கள் உருவாக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
x
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்காக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், பிரசாரத்திற்கான தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. சென்னை மயிலாப்பூரில் உள்ள பிரபல நிறுவனம் ஒன்று, அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்களுக்கு, பிரசார வேனை உருவாக்கும் பணியை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. பிரசாரத்திற்கு தேவையான மைக் மற்றும் SPEAKER SETகளுடன் நாற்காலிகளும் கட்சிகளுக்கு வாடகை  விடப்படும் பணிகளை இந்நிறுவனம் 40 ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறது. பொதுவாக இசை நிகழ்ச்சிக்கு மட்டுமே SPEAKERகள் வாடகைக்கு விடும் இந்நிறுவனங்கள் தேர்தல் காலத்தில், அரசியல் கட்சிகளுக்கு வாடகைக்கு விட்டு பிசியாக இருப்பதாக கூறுகின்றனர். காலத்திற்கு ஏற்ப, SPEAKER களின் தோற்றமும், நவீன SPEAKER களும் தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதை தவிர இரவு நேர பிரசாத்தின் போது லைட் வசதிகளையும் இந்த குழு பொருத்துகிறது. பிரசாரத்தின் போது சேதமடையும் பொருட்களுக்கு அரசியல் கட்சிகள் இழப்பீடு தருவார்களா என்ற கேட்டதற்கு, , 40 ஆண்டுகளில் பிரசாரத்திற்கு எடுத்து செல்லும் எந்த பொருட்களும் சேதமடைந்தது இல்லை என்று பெருமிதமாக கூறுகின்றனர். பிரசாரம் சூடு பிடிக்கும் போது, தங்களது தொழிலும் சூடு பிடிக்கும் என்று மகிழ்ச்சியாக பிரசார ஆயத்த பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்