அமமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

அமமுக கட்சி சார்பாக 24 நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்களும், 9 சட்டப்பேரவை தொகுதி வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
x
அமமுக கட்சி சார்பாக 24 நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்களும், 9 சட்டப்பேரவை தொகுதி வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமான், தென்சென்னை தொகுதியில் இசக்கி சுப்பையா ஆகியோர் போட்டியிடுவதாகவும், மதுரை தொகுதியில் முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகன் டேவிட் அண்ணாதுரை போட்டியிடுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோல, சட்டப்பேரவை இடைத் தேர்தலில் பூந்தமல்லி தொகுதியில் ஏழுமலை, பெரம்பூரில் வெற்றிவேல், மானாமதுரையில் மாரியப்பன் கென்னடி, குடியாத்தத்தில் ஜெயந்தி பத்மநாபன் ஆகியோர் அமமுக சார்பில் போட்டியிடுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்