100 நாள் வேலை திட்டத்தை முடக்க மத்திய, மாநில அரசுகள் முயற்சி - திமுக எம்.பி. கனிமொழி குற்றச்சாட்டு

100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை சீரழிக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் செயல்பட்டு வருவதாக திமுக எம்.பி. கனிமொழி குற்றச்சாட்டு.
x
தூத்துக்குடி மாவட்டம் காடலகுடி, மாவிலோடை,ஜெகவீர பாண்டியபுரம் உள்ளிட்ட பகுதிகளில் திமுக சார்பில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் திமுக எம்பி கனிமொழி கலந்து கொண்டு, கிராம மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். காடலகுடி கிராமத்தில் கனிமொழி பேசும்போது, கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் மேம்பட கொண்டு வரப்பட்ட 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை சீரழிக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். பொள்ளாச்சி பாலியல் வழக்கில் உண்மை குற்றவாளிகளை மறைக்க ஆளுங்கட்சியினர் முயன்று வருவதாக அவர் குற்றம்சாட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்