வேட்பாளரை பார்க்காமல் அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் - அமைச்சர் தங்கமணி

வேட்பாளரை பார்க்காமல் அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
x
மத்தியில் நிலையான ஆட்சியை தரும் பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்பதாகவும், வேட்பாளரை பார்க்காமல் அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார். நாமக்கல்லில் நடைபெற்ற, ஜெயலலிதா பிறந்தநாள் விழா கூட்டத்தில் பங்கேற்ற அவர், அதிமுக, பாமக கூட்டணியால், வாக்கு வங்கி அதிகரித்திருப்பதாகவும் மக்களின் தேவைகளை மத்திய அரசிடம் பெறும் அரசாக தமிழக அரசு உள்ளதாகவும் கூறினார். பிரதமர் யார் என்று கூறமுடியாத கட்சியுடன்  திமுக தலைவர் ஸ்டாலின் கூட்டணி வைத்திருப்பதாகவும் தங்கமணி விமர்சித்தார். 

Next Story

மேலும் செய்திகள்