ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ. நள்ளிரவில் கைது - சித்தூரில் பரபரப்பு

ஆந்திர மாநிலம் சித்தூரில் போராட்டம் நடத்திய ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டார்.
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ. நள்ளிரவில் கைது - சித்தூரில் பரபரப்பு
x
ஆந்திர மாநிலம் சித்தூரில் போராட்டம் நடத்திய ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டார். சித்தூர் முதலாவது காவல்நிலையம் வந்த சந்திரிகிரி தொகுதி எம்.எல்.ஏ. பாஸ்கர்ரெட்டி, கைது செய்யப்பட்ட தமது ஆதரவாளர்கள் 3 பேரை, விடுவிக்க வலியுறுத்தி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், தெலுங்கு தேசம் கட்சியின் அழுத்தத்தால், அவர்களை கைது செய்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார். தங்கள் மீதான குற்றச்சாட்டை கண்டித்து தெலுங்கு தேசம் கட்சியினர் காவல் நிலையம் வந்து ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, கலைந்துசெல்ல மறுத்த எம்.எல்.ஏ. பாஸ்கர்ரெட்டி, கைது செய்யப்பட்டார்.

Next Story

மேலும் செய்திகள்