அ.தி.மு.க. - பா.ம.க. கூட்டணி இயற்கையானது - ராமதாஸ்

அதிமுக - பாமக கூட்டணி இயற்கையான கூட்டணி என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
x
பாமக சிறப்பு பொது குழு கூட்டம் புதுச்சேரி அருகே பட்டானூர் பகுதியில் நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ், அக்கட்சி தலைவர் ஜி.கே. மணி, இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய ராமதாஸ், அதிமுக - பாமக கூட்டணி இயற்கையான கூட்டணி என்று கூறினார்.  இந்த கூட்டணி வெற்றி பெற பாமக தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என்று ராமதாஸ் கேட்டு கொண்டார்.

Next Story

மேலும் செய்திகள்