காங்கிரஸ், திமுக ஆட்சிக்கு வரக் கூடாது என்பதே அதிமுகவின் நோக்கம் - தம்பிதுரை

காங்கிரஸ் மற்றும் திமுக ஆட்சிக்கு வரக் கூடாது என்பதே அதிமுகவின் நோக்கம் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
x
காங்கிரஸ் மற்றும் திமுக ஆட்சிக்கு வரக் கூடாது என்பதே அதிமுகவின் நோக்கம் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார். திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த மருங்காபுரி ஒன்றியத்தில் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளிடம் குறைகளை கேட்கும் நிகழ்வு நடந்தது. இதில் கலந்து கொண்ட தம்பிதுரை பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஒவ்வொரு கட்சிகளுக்கும் தனிக் கொள்கைகள் இருக்கிறது. தேர்தல் கூட்டணி என்பது வேறு என்றார். எதிர்கட்சியாக இருந்ததால் தான் தமிழகத்திற்கான திட்டங்கள் பெற முடியாமல் இருந்ததாக கட்சியின் தலைமை கருதுவதாகவும் அவர் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்