தேமுதிக பொதுசெயலாளர் விஜயகாந்த் உடன் திமுக தலைவர் ஸ்டாலின் சந்திப்பு

சென்னை சாலிகிராமம் வீட்டில் தேமுதிக பொதுசெயலாளர் விஜயகாந்த் உடன் திமுக தலைவர் ஸ்டாலின் சந்திப்பு
தேமுதிக பொதுசெயலாளர் விஜயகாந்த் உடன் திமுக தலைவர் ஸ்டாலின் சந்திப்பு
x
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை நேரில் சந்தித்த தி.மு.க. தலைவர் ஸ்டாலின், அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் வேலையில், தே.மு.தி.க. எந்த கூட்டணிக்கு செல்லும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்தை நேரில் சென்று ஸ்டாலின் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  அரசியல் குறித்து விஜயகாந்திடம் பேசவில்லை என்றார்.  தே.மு.தி.க. கூட்டணிக்கு வந்தால் ஏற்றுக்கொள்வீர்களா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, உங்களது நல்ல எண்ணத்துக்கு பாராட்டுக்கள் என்று சூசகமாக பதில் அளித்தார். 

விஜயகாந்த் உடன் ஸ்டாலின் சந்திப்பு - மூத்த பத்திரிகையாளர் கோலாகல ஸ்ரீனிவாஸ் கருத்து 


விஜயகாந்த - ஸ்டாலின் சந்திப்பு : ஷ்யாம் (மூத்த பத்திரிகையாளர்) கருத்து 


விஜயகாந்த் உடன் சந்திப்பு - ஸ்டாலின் விளக்கம் 

அரசியல் குறித்து பேச வரவில்லை, மனிதாபிமான உணர்வுடன் தான் சந்தித்தேன் என ஸ்டாலின் பேச்சு 

* கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையா? என்ற கேள்விக்கு, உங்கள் எண்ணங்களுக்கு என் பாராட்டு என ஸ்டாலின் பதில்


Next Story

மேலும் செய்திகள்