திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து - நீதிமன்றம் கேள்வி

திருவாரூர் இடைத் தேர்தல் நிறுத்தி வைப்பது குறித்து மத்திய அரசிடம் ஆலோசனை நடத்தி அனுமதி பெறப்பட்டதா என்பது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
x
திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் ரத்து செய்தது செல்லாது என்பதால் அந்த அறிவிப்புக்கு தடை விதிக்க கோரி தாமோதரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அறிவிக்கப்பட்ட தேர்தலை ரத்து செய்ய தலைமை தேர்தல் ஆணையருக்கு அதிகாரம் இல்லை என்பதோடு தமிழக அரசின் தலைமை செயலர் கடிதம் மூலம் கேட்டு கொண்டதற்காக தேர்தலை ரத்து செய்ய முடியாது என்பதால் மத்திய அரசுடன் ஆலோசித்து ஒப்புதல் பெற்ற பிறகே தேர்தலை ரத்து செய்ய வேண்டும் எனவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

இந்த மனு, உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணை வந்தது. அப்போது திருவாரூர் இடைத்தேர்தல் நிறுத்தி வைப்பது தொடர்பாக மத்திய அரசிடம் கலந்தாலோசித்து அனுமதி பெறப்பட்டதா? என்பது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் ஜனவரி 30ஆம் தேதி பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை ஒத்தி வைத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்