நாடாளுமன்ற தேர்தலுக்காக கூட்டணி குறித்து பேச அதிமுக குழு அமைப்பு

நாடாளுமன்ற தேர்தலையொட்டி கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த, தேர்தல் அறிக்கை தயாரிக்க, அ.தி.மு.க சார்பில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
x
நாடாளுமன்ற தேர்தலையொட்டி கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த, தேர்தல் அறிக்கை தயாரிக்க, அ.தி.மு.க சார்பில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். தொகுதி பங்கீடு குறித்து  பேச்சுவார்த்தை நடத்த அமைக்கப்பட்ட குழுவில், அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி முனுசாமி, வைத்திலிங்கம், செய்தி தொடர்பாளர் பிரபாகர், அமைச்சர்கள் தங்க மணி, வேலுமணி ஆகிய 5 பேர் இடம் பெற்று உள்ளனர்.

தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவில், பொன்னையன், நத்தம் விஸ்வநாதன், அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி. சண்முகம், எம்.எல்.ஏ செம்மலை, மனோஜ் பாண்டியன், பெர்னாட் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். தேர்தல் பிரசாரக் குழுவில், தம்பிதுரை, அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், செய்தி தொடர்பாளர்கள் வளர்மதி, கோகுல இந்திரா, கொள்கை பரப்பு துணை செயலாளர் வைகைச்செல்வன், வேணுகோபால் ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்

Next Story

மேலும் செய்திகள்