"புகழ் மிக்கவர்களுக்கு மேலும் புகழ் சேர்க்கிறது, அரசு" - முதலமைச்சர் பழனிசாமி

சேலத்தில், முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவிற்கு, அமைக்கப்பட்டுள்ள மணி மண்டபத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
x
80 லட்ச ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த மணி மண்டபத்திற்கான பணியை, கடந்த 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம்  தேதி, முதலமைச்சர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். தொடர்ந்து கட்டுமான பணிகள் முழுவதுமாக நிறைவு பெற்ற நிலையில், எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் முழு உருவச்சிலையுடன் கூடிய  மணிமண்டபம், பொதுமக்கள் பார்வைக்காக இன்று திறந்து வைக்கப்பட்டது. எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா மணி மண்டபத்தினை திறந்து வைத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சிலைகளுக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எவ்வளவு தடைகள் வந்தாலும், மக்களுக்காக இந்த அரசு, தொடர்ந்து சேவை செய்யும் என்றார். 

Next Story

மேலும் செய்திகள்