"தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை தயாரித்தால் நடவடிக்கை" - அமைச்சர் டி.ஜெயக்குமார்

ஜனவரி 1-ம் தேதி முதல் தமிழகத்தில் அமலுக்கு வரும் பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை குறித்து அமைச்சர் டி. ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
x
ஜனவரி 1-ம் தேதி முதல் தமிழகத்தில் அமலுக்கு வரும் பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை குறித்து, மீன்வளம் மற்றும் நிர்வாக பணியாளர் சீர்திருத்தத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார். சென்னை - கிண்டியில் நடைபெற்ற "பிளாஸ்டிக் இல்லா தமிழகம்" என்ற கருத்தரங்கில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 100 க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் பொருட்களில், 14 பொருட்கள் மட்டுமே தமிழக அரசால் தடை செய்யப்பட்டு உள்ளதாக விளக்கம் அளித்தார். 

Next Story

மேலும் செய்திகள்