முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: பொன் ராதாகிருஷ்ணனுக்கு துரைமுருகன் பதில்

முல்லைப் பெரியாறு, மேகதாது அணை பிரச்சினைகளில் மத்திய அரசின் துரோகத்தை தமிழக மக்களும், விவசாயிகளும் ஒருபோதும் மறக்கவும், மன்னிக்கவும் மாட்டார்கள் என திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: பொன் ராதாகிருஷ்ணனுக்கு துரைமுருகன் பதில்
x
முல்லைப் பெரியாறு, மேகதாது அணை பிரச்சினைகளில் மத்திய அரசின் துரோகத்தை தமிழக மக்களும், விவசாயிகளும் ஒருபோதும் மறக்கவும், மன்னிக்கவும் மாட்டார்கள் என திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில், மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், அதிமுக அரசுக்கு வக்காலத்து வாங்குவதற்காக, தி.மு.க. துரோகம் செய்து விட்டதாக கூறுவதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.

முல்லைப் பெரியாறு நீர்மட்டத்தை 152-அடியிலிருந்து 136-ஆக அடியாக குறைத்தது 1979-ஆம் ஆண்டு நடைபெற்ற அ.தி.மு.க. ஆட்சி தான் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அதேநேரம், 1989-ஆம் ஆண்டு அணையின் நீர்மட்டத்தை 145 அடியாக உயர்த்தி உத்தரவிட்டவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி என்ற உண்மையைக் கூட தெரிந்து கொள்ளாமல் தி.மு.க.வை கொச்சைப்படுத்துவது மத்திய அமைச்சருக்கு அழகல்ல எனவும் துரைமுருகன் கூறியுள்ளார். காவிரியிலும், மேகதாது அணை பிரச்சினையிலும் மத்திய பாஜக அரசு செய்துள்ள துரோகத்தை ஒருபோதும் தமிழக மக்களும், விவசாயிகளும் மறக்கவும், மன்னிக்கவும் மாட்டார்கள் என எச்சரிக்க விரும்புவதாகவும் துரைமுருகன் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்