"தமிழகத்தில் நீர் உரிமையை மீட்க அணை பாதுகாப்பு மசோதா நிறைவேற்ற வேண்டும்" - அன்புமணி

தமிழகத்தில் நீர் உரிமையை மீட்க அணை பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று பா.ம.க இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
x
மேகதாதுவில் புதிய அணைகட்ட முதற்கட்ட ஆய்வு நடத்த அனுமதி வழங்கி மத்திய அரசு தமிழக மக்களுக்கு துரோகம் செய்து வருகிறது. இது காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது என்று கூறிய அவர், காவிரியின் குறுக்கே கர்நாடகம் அணை கட்டுவதை தடுத்து நிறுத்த தமிழக அரசு சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை கூட்டி, அணை பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். கஜா புயலால் பாதிக்கப்பட்ட ஆறு மாவட்டத்திலும் ஒரு குடும்பத்துக்கு ஐம்பதாயிரம் ரூபாய் முதற்கட்ட நிவாரண தொகை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

Next Story

மேலும் செய்திகள்