பொன்.மாணிக்கவேல் நேர்மையானவர் என்று யார் சொன்னது? - அமைச்சர் சிவி சண்முகம்

பொன்.மாணிக்கவேல் அவர் மீதான பல குற்றச்சாட்டுக்கு இதுவரை பதிலளிக்கவில்லை என அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.
x
சிலை கடத்தல் தடுப்பு பிரிவுத் தலைவர் மற்றும் சிறப்பு அதிகாரியாக உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட பொன் மாணிக்கவேல் மீது, அவருக்கு கீழ் பணியாற்றியவர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி உள்ளனர். இது யாருடைய தூண்டுதலின் பேரிலோ அளிக்கப்பட்டு உள்ளதாக பொன் மாணிக்கவேல் தெரிவித்திருந்தார். பொன். மாணிக்கவேல் ஒரு நேர்மையான அதிகாரி என்றால், தம்மீதான குற்றச்சாட்டுகளுக்கு அவர்  விளக்கம் அளித்திருக்க வேண்டும் என்று சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்