அமைச்சர்களை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தூத்துக்குடி சென்றிருந்த அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ மற்றும் ராஜலட்சுமி ஆகியோரை ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு உட்பட்ட சவலப்பேரி பகுதியில் பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
அமைச்சர்களை முற்றுகையிட்ட கிராம மக்கள்
x
சுற்றியுள்ள 25 கிராமங்களை சேர்ந்த மக்கள் ஒன்றுகூடி, தேவேந்திர குல வேலாளர் என அரசாணை பிறப்பிக்க வேண்டும் என ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் ராஜலெட்சுமியிடம் வாக்குவாதம் செய்தனர். அப்போது அங்குவந்த அமைச்சர் வேலுமணி இந்த விவகாரம் குறித்து முதலமைச்சரை நேரில் சந்திக்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்த‌தை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். 

Next Story

மேலும் செய்திகள்