ஜெயலலிதாவின் மருத்துவ செலவு முழு விவரம்
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது உணவுக்காக 1 கோடியே 17 லட்ச ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது உணவுக்காக 1 கோடியே 17 லட்ச ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அளித்துள்ள அறிக்கையில்,
* ஜெயலலிதா 75 நாட்கள் சிகிச்சை பெற்றதற்கான மருத்துவ செலவு 6 கோடியே 85 லட்சத்து 69 ஆயிரத்து 584 ரூபாய் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
* லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பிலேக்கு 92 லட்சத்து 7 ஆயிரத்து 844 ரூபாயும், பிசியோதெரபி சிகிச்சைக்காக 1 கோடியே 29 லட்சத்து 9 ஆயிரத்து 319 ரூபாயும் சிங்கபூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
* ஜெயலலிதாவிற்கான அறை வாடகை 24 லட்சத்து 19 ஆயிரத்து 800 ரூபாய், பொதுவான அறை வாடகை 1 கோடியே 24 லட்சத்து 47ஆயிரத்து 910 என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* மருத்துவ செலவுக்கான பணம் கடந்த 2016 அக்டோடபர் 13ஆம் தேதி காசோலையாக 41 லட்சத்து 13 ஆயிரத்து 304 ரூபாய் மருத்துவமனைக்கு வழங்கப்பட்டதாகவும், ஜெயலலிதா இறந்த பிறகு 2017 ஜூன் 15 ஆம் தேதி அதிமுக சார்பில் 6 கோடி ரூபாய் காசோலையாக கொடுக்கப்பட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
* மருத்துவ செலவு 6 கோடியே 85 லட்சத்து 69 ஆயிரத்து 584 ரூபாயில், 44 லட்சத்து 56 ஆயிரத்து 280 ரூபாய் இன்னும் பாக்கி இருப்பதாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாக அறிக்கையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
Next Story