ம.பி முதல்வராக பதவியேற்றார் கமல்நாத் : விவசாய கடன் தள்ளுபடி - முதல் உத்தரவு
பதிவு : டிசம்பர் 17, 2018, 06:58 PM
மத்திய பிரதேச முதலமைச்சராக கமல்நாத் பதவியேற்றுள்ளார்.
மத்திய பிரதேச முதலமைச்சராக கமல்நாத் பதவியேற்றுள்ளார். தலைநகர் போபாலில் நடைபெற்ற எளிய விழாவில்,  கமல்நாத்துக்கு, ஆளுநர் ஆனந்தி பென் படேல், பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். 

தலைவர்கள் பங்கேற்பு :

பதவியேற்பு விழாவில், முன்னாள் பிரதமர்கள் மன்மோகன்சிங், தேவகவுடா , காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். திமுக சார்பில், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, அக்கட்சியின் முதன்மை செயலாளர் டி.ஆர். பாலு ஆகியோரும் கலந்து கொண்டனர். மத்திய பிரதேச முதலமைச்சராக பதவியேற்றபின், தேர்தல் வாக்குறுதிபடி, விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்து, கமல்நாத், முதல் உத்தரவில் கையெழுத்து போட்டார். 

தொடர்புடைய செய்திகள்

வேலைக்காரரை கொடூரமாக கொன்ற மருத்துவர்

மத்திய பிரதேசத்தில் வேலைக்காரரை கொடூரமாக மருத்துவர் வெட்டி கொன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

124 views

மாணவர்களின் நிர்பந்தத்தால் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட பேராசிரியர்

மத்திய பிரதேச மாநிலத்தில் மாணவர்களின் நிர்பந்தத்தால் அவர்களின் காலில் விழுந்து பேராசிரியர் மன்னிப்பு கோரினார்.

652 views

காவல்நிலையத்தில் காவலர்கள் மீது கைதி கொடூர தாக்குதல்

மத்திய பிரதேச மாநிலம் பிந்த் பகுதியில் உள்ள காவல்நிலையம் ஒன்றில் இரவு பணியில் இருந்த இரண்டு காவலர்களை, விசாரணை கைதி ஒருவர், பின்புறமாக இருந்து கொண்டு கொடூரமாக தாக்கினார்.

3261 views

பிற செய்திகள்

40 நாடாளுமன்ற தொகுதி மக்கள் மனநிலை என்ன? - பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளில் வெற்றி யாருக்கு ? என்பது பற்றிய தந்தி டிவியின் பிரம்மாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.

308 views

நாடாளுமன்ற தேர்தல் : பிரசார வாகனங்களை உருவாக்கும் பணி தீவிரம்...

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பிரசார வாகனங்கள் உருவாக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

80 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.