2 மாநில முதலமைச்சர்களின் பதவியேற்பு விழாவில் ஸ்டாலின் பங்கேற்பு

காங்கிரஸ் முதலமைச்சர்களின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக ஸ்டாலின் புறப்பட்டுச் சென்றார்.
2 மாநில முதலமைச்சர்களின் பதவியேற்பு விழாவில் ஸ்டாலின் பங்கேற்பு
x
சமீபத்தில் நடைபெற்ற 5 மாநில தேர்தல்களில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இந்நிலையில், ராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் மற்றும் துணை முதலமைச்சராக சச்சின் பைலட் ஆகியோர் இன்று காலை 10.15 மணிக்கு பதவியேற்கின்றனர். இதுபோல, மத்திய பிரதேச முதலமைச்சராக கமல்நாத் இன்று பிற்பகல் 1.15 மணிக்கு பதவியேற்கிறார். இந்நிலையில், ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசம் மாநிலங்களில் நடைபெறும் காங்கிரஸ் முதலமைச்சர்களின் பதவியேற்பு விழாக்களில், திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இதற்காக, ஸ்டாலின் மற்றும் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி இருவரும் தனி விமானத்தில், இன்று காலை ஜெய்ப்பூர் புறப்பட்டு சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்