இன்று திமுகவில் இணைகிறார் செந்தில் பாலாஜி

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று, காலை திமுகவில் இணைகிறார்.
இன்று திமுகவில் இணைகிறார் செந்தில் பாலாஜி
x
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று, காலை திமுகவில் இணைகிறார். சென்னை - அண்ணா அறிவாலயத்தில் பகல் 11.30 மணிக்கு, இதற்கான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாநில அமைப்பு செயலாளராக இருந்த செந்தில் பாலாஜி, தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேரில் ஒருவர். அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தில் அதிருப்தியில் இருந்த செந்தில் பாலாஜியை சமாதானம் செய்ய மேற்கொண்ட முயற்சி, தோல்வியில் முடிவடைந்தது. இதனிடையே, திமுகவில், செந்தில் பாலாஜி இணைவதையொட்டி, அவரது ஆதரவாளர்கள், கார் மற்றும் வேன்கள் மூலம் சென்னை வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்