திமுகவில் இணைய செந்தில் பாலாஜி திட்டம்

டி.டி.வி. தினகரன் ஆதரவு தகுதி நீக்க எம்எல்ஏக்களில் ஒருவரான செந்தில் பாலாஜி, விரைவில் திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
x
டி.டி.வி. தினகரன் ஆதரவு தகுதி நீக்க எம்எல்ஏக்களில் ஒருவரான செந்தில் பாலாஜி, விரைவில் திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரான செந்தில்பாலாஜி, அரவக்குறிச்சி தொகுதியில் இருந்து சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, தற்போது, அதிருப்தி காரணமாக அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாகவும், தனது ஆதரவாளர்களுடன் விரைவில் திமுகவில் இணைய இருப்பதாகவும் செய்தி வெளியாகி உள்ளது. இதனிடையே, கரூரில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் கூட்டம் நடத்தவும் செந்தில் பாலாஜி ஏற்பாடு செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்