தெலங்கானா : ஆட்சி அமைக்க உரிமை கோரியது, டி. ஆர். எஸ்

தெலங்கானாவில், சந்திரசேகர ராவ் தலைமையிலான டி. ஆர். எஸ் கட்சி அமோக வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக்கொண்டுள்ளது.
தெலங்கானா : ஆட்சி அமைக்க உரிமை கோரியது, டி. ஆர். எஸ்
x
தெலங்கானாவில், சந்திரசேகர ராவ் தலைமையிலான டி. ஆர். எஸ் கட்சி அமோக வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக்கொண்டுள்ளது. அக்கட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்களின் கூட்டம் நாளை வியாழக்கிழமை பகல் 11.30 மணிக்கு ஐதரபாத்தில் கூடுகிறது. இந்த கூட்டத்தில் சட்டமன்ற கட்சி தலைவராக சந்திரசேகர ராவ் தேர்ந்தெடுக்கப்படுகிறார். நடந்து முடிந்த தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலின் முழு முடிவுகளும், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளன. இதன்படி, 119 தொகுதிகள் கொண்ட தெலங்கானாவில், டி.ஆர். எஸ் கட்சி 88 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

காங். கூட்டணிக்கு 21 இடங்கள் மட்டுமே கிடைத்தன. பா.ஜ.க 1 தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. பிற கட்சிகள் மற்றும், சுயேட்சை உறுப்பினர்கள் 9 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதனிடையே, டி. ஆர். எஸ் கட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட எம். எல்.ஏக்களின் கூட்டம் ஐதராபாத்தில் நாளை, வியாழக்கிழமை நண்பகல் 11.30 மணிக்கு கூடுகிறது. இந்த கூட்டத்தில் சட்டமன்ற கட்சி தலைவராக சந்திரசேகர ராவ் தேர்ந்தெடுக்கப்படுகிறார். எனவே, தெலங்கானாவில் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள சந்திரசேகர ராவ், ஒரிரு நாளில், முதலமைச்சராக பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்