காங்கிரஸ் கட்சிக்கு மாயாவதி ஆதரவு அளிப்பாரா...?

ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் இழுபறி நீடிப்பதால் சுயேச்சை எம்எல்ஏ-க்களை இழுக்கும் முயற்சியில் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இறங்கியுள்ளன.
காங்கிரஸ் கட்சிக்கு மாயாவதி ஆதரவு அளிப்பாரா...?
x

5 மாநில தேர்தல் முடிவுகளில் தெலங்கானா, சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 3 மாநிலங்களில் தெளிவான முடிவுகள் வெளியாகி உள்ளன. ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய இரண்டு மாநில முடிவுகளில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது. மாலை 5 மணிக்கு பிறகே, தெளிவான முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஆட்சியை கைப்பற்ற, பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. 

ராஜஸ்தானில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் சுயேச்சைகள் மற்றும் சிறிய கட்சிகள் முன்னிலையில் உள்ளன. எனவே, வெற்றி பெற்ற சுயேச்சை எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சிகள்  தரப்பில் பேச்சுவார்த்தை தொடங்கி உள்ளது. இதுபோல, மத்திய பிரதேசத்தில் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியின் ஆதரவை காங்கிரஸ் கட்சி கேட்டுள்ளது. 

ஏற்கனவே, தேர்தலுக்கு முன்பு மாயாவதியுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், காங்கிரஸ் நடத்தும் இந்த பேச்சுவார்த்தை சுமுகமாக முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கடும் நிபந்தனைகளை மாயாவதி விதிப்பார் எனவும் தெரிகிறது. மேலும், நேற்று டெல்லியில் நடைபெற்ற அனைத்து எதிர்க்கட்சிகள் கூட்டத்திலும் மாயாவதி மற்றும் சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த யாரும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


Next Story

மேலும் செய்திகள்