பாஜகவுக்கு எதிராக மெகா கூட்டணி உறுதி - கனிமொழி

மெகா கூட்டணி நிச்சயம் உருவாகும் என கனிமொழி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
x
மத்தியில் ஆளும் பாஜகவை வீழ்த்த புதிய வியூகம் வகுக்கப்பட்டு உள்ளதாக கூறியுள்ள மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி, மெகா கூட்டணி நிச்சயம் உருவாகும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். வருகிற 11ஆம் தேதி கூடும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க புதுடெல்லி புறப்பட்டு செல்லும் முன், சென்னை - விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, பா.ஜ.க வுக்கு எதிராக வலுவான கூட்டணி உருவாகும் என்று தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்