நெல் ஜெயராமனை சந்தித்து நிதி உதவி அளித்த அமைச்சர்
நெல் சேகரிப்பாளர் நெல் ஜெயராமனின் மருத்துவ சிகிச்சைக்கான செலவை ஏற்றுக் கொள்வது குறித்த பரிந்துரை முதலமைச்சரிடம் கொண்டு செல்லப்படும் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நெல் ஜெயராமனை சந்தித்த பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் காமராஜ் இவ்வாறு தெரிவித்தார். முன்னதாக முதலமைச்சர் ஏற்கனவே அறிவித்திருந்த 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை அமைச்சர் காமராஜ், அவரது குடும்பத்தாரிடம் வழங்கினார்.
Next Story