எத்தனை குட்டிக்கரணம் போட்டாலும் தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியாது - மு.க.ஸ்டாலின்

எத்தனை குட்டிக்கரணம் போட்டாலும், தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியாது என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
x
தமிழகத்தில் தண்ணீர் இல்லாததால் புல் கூட வளர முடியாத நிலையில், தாமரை எப்படி மலரும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார். காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டும் ஆய்வுக்கு அனுமதி வழங்கிய மத்திய அரசைக்கண்டித்து, திருச்சியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஸ்டாலின், தமிழக பாஜக மீது, இந்த அதிரடி தாக்குதலை தொடுத்தார். 


" குட்டிகரணம் போட்டாலும் காலூன்ற முடியாது"

மேகதாதுவில் அணை கட்டினால், தமிழகத்திற்கு நிச்சயம் தண்ணீர் வராது என்று அவர் அச்சம் தெரிவித்தார். கர்நாடகா மீது பாஜகவுக்கு பாசம் உள்ளதாக குறிப்பிட்ட ஸ்டாலின், எத்தனை குட்டிக்கரணம் போட்டாலும், தமிழகத்தில் காலூன்ற முடியாது என்றார்.  மேகதாது விவகாரத்தில், மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் செயல்படுகிறது என்றும்  ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார். 

Next Story

மேலும் செய்திகள்