7 பேர் விடுதலையில் தாமதம் செய்தால் ஆளுநரை எங்கும் நுழைய விடமாட்டோம் - வைகோ

7 பேர் விடுதலையில் ஆளுநர் தாமதம் செய்தால், தமிழகத்தில் எந்த பகுதியிலும் அவரை நுழைய விடமாட்டோம் என வைகோ தெரிவித்துள்ளார்.
x
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில், சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே இந்த போராட்டம் நடந்தது. ஆளுநர் பன்வாரிலாலைக் கண்டித்தும், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தியும், அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து, போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கைது செய்யப்பட்டனர். 

கைது செய்யப்பட்ட வைகோ உள்ளிட்ட அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த வைகோ, 7 பேர் விடுதலையில் ஆளுநர் தாமதம் செய்தால், தமிழகத்தில் எந்த பகுதியிலும் அவரை நுழைய விடமாட்டோம் என தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்