திமுக அனைத்துக்கட்சி கூட்டம் ஏன்? - ஸ்டாலின் விளக்கம்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுடனான சந்திப்பு குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.
திமுக அனைத்துக்கட்சி கூட்டம் ஏன்? - ஸ்டாலின் விளக்கம்
x
ஸ்டாலினை சந்தித்தார் வைகோ :

அண்ணா அறிவாலயத்தில் சுமார் 50 நிமிடம் இந்த சந்திப்பு நிகழ்ந்தது. அப்போது, திமுக பொருளாளர் துரைமுருகன் உள்பட அக்கட்சியின் நிர்வாகிகள் உடனிருந்தனர். திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு இடமில்லை என துரைமுருகன் அண்மையில் தந்தி டிவி பேட்டியில் அறிவித்திருந்த சூழலில், ஸ்டாலின் - வைகோ சந்திப்பு, தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


வைகோ சந்திப்பு :  ஸ்டாலின் விளக்கம்

சென்னை - அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க. ஸ்டாலின் திமுக கூட்டணியில் மதிமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் இடம் பெற்றுள்ளனவா? என்ற கேள்விக்கு பதில் அளித்தார். 

" திமுக கூட்டணியில் நெருடல் இல்லை" - வைகோ



திமுக கூட்டணியில் எந்த நெருடலும் இல்லை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். ஸ்டாலினுடனான சந்திப்புக்குப்பின், அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதிமுக போராட்டத்திற்கு திமுக ஆதரவு தெரிவித்ததின் மூலம், சர்ச்சைக்கு, ஸ்டாலின் முற்றுப்புள்ளி வைத்து விட்டார் என்று விளக்கம் அளித்தார்.



Next Story

மேலும் செய்திகள்