நளினி உள்ளிட்டோரை விடுவிக்க வேண்டும் - ராமதாஸ்
தமிழக அரசின் பரிந்துரை மீது முடிவு எடுக்காமல் ஆளுநர் தாமதம் செய்வது மனித உரிமை மீறல் என அறிக்கையொன்றில் கூறியுள்ள டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
ராஜீவ் கொலை வழக்கு கைதிகள் நளினி, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் உரிய விதிகள் வகுக்கப்படாத நிலையில் இல்லாத விதிகளை காரணம் காட்சி விடுதலைக்கு மத்திய அரசு முட்டுக்கட்டை போட்டு விட்டதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றஞ்சாட்டி உள்ளார். தமிழக அரசின் பரிந்துரை மீது முடிவு எடுக்காமல் ஆளுநர் தாமதம் செய்வது மனித உரிமை மீறல் என அறிக்கையொன்றில் கூறியுள்ள டாக்டர் ராமதாஸ் இனியும் தாமதிக்காமல் நளினி உள்ளிட்ட 7 பேரையும் விடுவித்து ஆளுநர் ஆணையிட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
Next Story