மக்களை சந்திக்காமல் பாதியில் திரும்பி சென்றது ஏன் ? - முதலமைச்சருக்கு ஸ்டாலின் கேள்வி

மழை விட்ட பின் பாதிக்கப்பட்ட மக்களை முதலமைச்சர் சந்தித்திருக்க வேண்டும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
x
புயல் பாதித்த பகுதிகளில், குறிப்பிட்ட இடங்களுக்கு மட்டுமே முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சென்று, நிவாரண உதவிகளை வழங்கியதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டி உள்ளார். அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசியஅவர், மழை விட்ட பின் , பாதிக்கப்பட்ட மக்களை முதலமைச்சர்  சந்தித்திருக்க வேண்டும் என்றார். பிரதமர் மோடியை திமுக எம்பிக்கள் சந்தித்து, தமிழகத்திற்கு நிவாரண உதவி வழங்குமாறு நேரில் வலியுறுத்துவார்கள் என்று கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தபோது ஸ்டாலின் தெரிவித்தார். Next Story

மேலும் செய்திகள்