இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு : ஜனநாயக பச்சைப் படுகொலை - ஸ்டாலின்

இலங்கை நாடாளுமன்றத்தை அதிபர் சிறிசேன கலைத்திருப்பது, ஜனநாயக பச்சைப் படுகொலை என திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு : ஜனநாயக பச்சைப் படுகொலை - ஸ்டாலின்
x
இதுதொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்துள்ளதன் மூலம் மிக மோசமான அரசியல் சட்ட நெருக்கடியை உருவாக்கி - அங்கு பாரம்பரியமாக வாழ்ந்து வரும் தமிழர்களின் நலனுக்கும், பாதுகாப்பிற்கும் மிகப்பெரிய ஏமாற்றத்தையும் அச்சுறுத்தலையும் அதிபர் சிறிசேன ஏற்படுத்தி இருப்பதாக ஸ்டாலின் குற்றம் சாட்டி உள்ளார். 

தமிழர்களுக்கு அதிகாரம் வழங்குவதற்காக இலங்கை அரசியல் சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ள உருவாக்கப்பட்ட அரசியல் நிர்ணய சபை பணிகளும் தடை பட்டு விட்டது என்று குறிப்பிட்டுள்ள ஸ்டாலின்,கண்ணுக்கு எட்டிய தூரத்தில் நடந்துள்ள மிகப்பெரிய அநியாயத்தை பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு கண்டும் காணாமலும் தட்டிக் கேட்காமலும்  இருப்பதாக தெரிவித்துள்ளார். இலங்கையில் நிகழ்த்தப்பட்டுள்ள ஜனநாயக பச்சை படுகொலைக்கு, இந்திய அரசு கடும் கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும் என்றும் அங்கு ஈழத்தமிழர்கள் அமைதியாக, பாதுகாப்பாக, கண்ணியத்துடன் வாழ தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிக்கையில் 
ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்