"காய்ச்சல் உயிரிழப்புகளை அரசு தடுக்கவில்லை" - பூங்கோதை ஆலடி அருணா
பதிவு : நவம்பர் 04, 2018, 02:57 PM
டெங்கு காய்ச்சல், பன்றிக் காய்ச்சலால் தொடர் உயிரிழப்புகள் நிகழ்ந்து கொண்டிருப்பதை அரசு தடுக்காமல் வேடிக்கை பார்த்து வருவதாக பூங்கோதை ஆலடி அருணா குற்றம்சாட்டினார்.
சென்னை மாதவரம் வடபெரும்பாக்கத்தில் திமுக சார்பில் நடைபெற்ற மருத்துவ முகாமினை அக்கட்சியின் மருத்துவ அணி தலைவர் பூங்கோதை ஆலடி அருணா மற்றும் மருத்துவ அணி செயலாளர் என்.வி.என்.சோமு கனிமொழி ஆகியோர் தொடங்கி வைத்தனர். அப்போது பேசிய பூங்கோதை, டெங்கு காய்ச்சல், பன்றிக் காய்ச்சலால் தொடர் உயிரிழப்புகள் நிகழ்ந்து கொண்டிருப்பதை அரசு தடுக்காமல் வேடிக்கை பார்த்து வருவதாக குற்றம்சாட்டினார். பன்றி காய்ச்சலுக்கு தடுப்பு ஊசிகள், மருந்துகள் இருந்தபோதும், மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் மருந்துகளை  கொடுத்து நோயை தடுக்கும் முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகளை சுகாதார அமைச்சர் எடுக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

தொடர்புடைய செய்திகள்

பன்றிக்காய்ச்சலுக்கு 3 பேர் உயிரிழப்பு

பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 3 பேர் உயிரிழந்தனர்.

182 views

கோவை அரசு மருத்துவமனையில் பன்றி காய்ச்சலுக்கு இரண்டு பெண்கள் பலி

கோவை அரசு மருத்துவமனையில் பன்றி காய்ச்சல் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தவர்களுள் 2 பெண்கள் உயிரிழந்தனர்.

172 views

பிற செய்திகள்

மனைவி கொடூரமாக வெட்டிக் கொலை - கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே மனைவியை வெட்டி கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

7 views

தமிழகத்தில் 3 நாட்களுக்கு இடியுடன் மழை - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

5 views

இருசக்கர வாகனத்தின் லாக் உடைத்து திருட்டு - திருடனை பிடிக்க போலீசார் தீவிரம்

கன்னியாகுமரியில் இருசக்கர வாகனத்தை திருடி செல்லும் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளது

6 views

வீசும் அலையை என்னால் உணர முடிகிறது - பிரதமர் மோடி பேச்சு

கூடி உள்ள கூட்டத்தை பார்க்கும் போது வீசும் அலையை தன்னால் உணர முடிவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

8 views

சாலை போட முயன்ற 5 பேருக்கு ரூ.30,000 அபராதம்...

ராசிபுரம் அருகேயுள்ள போதமலை வனப்பகுதியில் சாலை அமைக்க முயன்ற 5 பேருக்கு தலா 30 ஆயிரம் வீதம் அபராதம் விதித்து வனச்சரகர் உத்தரவிட்டுள்ளார்.

410 views

2030 வரை அல் சிசியை அதிபராக அமர வைக்கும் சட்ட திருத்தம் : பொது வாக்கெடுப்பு தொடக்கம்

எகிப்து அதிபர் அப்துல் ஃபதா அல்-சீசீ, 2030 வரை பதவியில் நீடிக்க வழி வகை செய்யும் சட்ட திருத்தங்களுக்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியதை அடுத்து, சட்ட திருத்தத்தை அமல்படுத்த பொது வாக்கெடுப்பு அந்நாட்டில் தொடங்கியது.

56 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.