ஆறுமுகசாமி ஆணையம் அனுப்பிய கடிதத்திற்கு ஆளுநர் மாளிகை விளக்க கடிதம்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல விவரங்களை கேட்டு ஆறுமுகசாமி ஆணையம் அனுப்பிய கடிதத்திற்கு ஆளுநர் மாளிகை விளக்க கடிதம் அனுப்பியுள்ளது.
ஆறுமுகசாமி ஆணையம் அனுப்பிய கடிதத்திற்கு ஆளுநர் மாளிகை விளக்க கடிதம்
x
ஆளுநர் மாளிகை சார்பில், அப்போதைய தமிழக ஆளுநர் வித்யசாகர் ராவ், 2016 அக்டோபர் 6ஆம் தேதி குடியரசு தலைவருக்கு எழுதிய கடிதம், ஜெயலலிதா இறந்த பின்பு, 2016 டிசம்பர் 7 ஆம் தேதி எழுதிய கடிதம் ஆகிய இரண்டு கடிதங்கள் ஆணையத்திடம் வழங்கப்பட்டுள்ளது.2016 அக்டோபர் 1ஆம் தேதி ஜெயலலிதாவை மருத்துவமனையில் பார்த்த போது அவர் மயக்க நிலையில் இருந்ததாக வித்ய சாகர் ராவ் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். தமிழக சட்டம் ஒழுங்கு நிலை குறித்து தலைமைச் செயலாளரிடம் கேட்டறிந்ததாகவும் அப்போதைய ஆளுநர் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா நலம் பெற்று வர எழுதிய கடிதம், காவிரி தொடர்பாக போடப்பட்ட கூட்டம் உள்ளிட்ட விபரங்களும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.இடைத்தேர்தலில் போட்டியிடக் கூடியவர்கள் பெயர் பட்டியலை அதிமுக பொதுச்செயலாளர் என்ற முறையில் ஜெயலலிதா வெளியிட்டது, சமூக வலைதளங்களில் பரப்பப்பட்ட வதந்திகள் தொடர்பாக சைபர் க்ரைம் எடுத்த நடவடிக்கைகள் என அப்போதைய ஆளுநர் வித்யாசாகர் ராவ்  குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார். Next Story

மேலும் செய்திகள்