உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யாமல் இடைத்தேர்தலை சந்திக்க முடிவு - தினகரன்
உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யாமல் இடைத்தேர்தலை சந்திக்க முடிவு செய்துள்ளதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.
கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன் நெடுஞ்சாலை டெண்டர் முறைகேடு விவகாரத்தில் தம்மை விசாரிக்க கூடாது என்று முதலமைச்சர் மேல்முறையீடு செய்கிறார், ஆனால் குட்கா விவகார வழக்கில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஏன் மேல் முறையீட்டுக்கு போகவில்லை என்று கேள்வி எழுப்பினார். 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தால் காலதாமதம் ஏற்படும் என்றும் இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பில்லாமல் போய்விடும் என்றும் தினகரன் கூறினார். அதனால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேரும் இடைத்தேர்தலை சந்திக்க முடிவு செய்துள்ளதாக தினகரன் தெரிவித்தார்.
Next Story