2 நாள் பயணமாக ஜப்பான் சென்றார், பிரதமர் மோடி

இந்தியா - ஜப்பான் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, டோக்கியோ சென்றுள்ளார்.
2 நாள் பயணமாக ஜப்பான் சென்றார், பிரதமர் மோடி
x
டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் ஜப்பான் தலைநகர் டோக்கியோ சென்ற  பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், இம்பீரியல் ஓட்டலுக்கு சென்ற பிரதமர், ஜப்பான் வாழ் இந்தியர்களுடன் கலந்துரையாடினார். இரண்டு நாள் பயணத்தில், இந்தியா - ஜப்பான் வருடாந்திர உச்சி மாநாட்டில் மோடி கலந்து கொள்கிறார். மேலும், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, தனது வீட்டில் அளிக்கும் விருந்திலும் பிரதமர் மோடி பங்கேற்கிறார். அப்போது, இருதரப்பு உறவு உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Next Story

மேலும் செய்திகள்