சபரிமலை விவகாரம் - கேரள அரசுக்கு அமித் ஷா கண்டனம்
ஐயப்ப பக்தர்களின் போராட்டத்தை கேரள மாநில அரசு ஒடுக்க நினைப்பதாக பாஜக தேசிய தலைவர் அமித் ஷா குற்றஞ்சாட்டியுள்ளார்.
உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவதாக கூறிக்கொண்டு நடந்துவரும் அடக்குமுறைகளை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். மத நம்பிக்கையையும் பாராம்பரியத்தையும் அழிக்க பினராயி விஜயன் தலைமையிலான அரசு நினைப்பதாக குற்றம்சாட்டியுள்ள அமித் ஷா, இது தொடருமானால் ஆட்சியை இழக்க நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.மக்களின் நம்பிக்கைகளை பாதிக்காமல் நீதிமன்ற உத்தரவுகள் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
Next Story