சி.பி.ஐ இயக்குநரை மாற்றியது உள்நோக்கம் கொண்டது - ஸ்டாலின்

முக்கிய வழக்குகள் மீது விசாரணை நடத்த வேண்டிய சி.பி.ஐ இயக்குநரை மாற்றியது உள்நோக்கம் கொண்டது என, திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சி.பி.ஐ இயக்குநரை மாற்றியது உள்நோக்கம் கொண்டது - ஸ்டாலின்
x
* நேர்மையாகவும், சுதந்திரமாகவும்  செயல்பட வேண்டிய, மிக முக்கியமான புலனாய்வு அமைப்பான சிபிஐ-யின் இயக்குநர் அலோக் வர்மாவை மாற்றியது கடும் கண்டனத்துக்குரியது எனவும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இடம் பெற்றுள்ள "கலோஜியத்தால்" தேர்வு செய்யப்பட்ட இயக்குநருக்கு பணிக்கால பாதுகாப்பு இருக்கும் நிலையில், அவரை மாற்றியது எதேச்சதிகாரச் செயல் எனவும் கூறியுள்ளார்.

* ரஃபேல் ஊழல் புகாரை நேரடியாக பெற்ற சி.பி.ஐ இயக்குநர், அதன்மீது முதற்கட்ட விசாரணைக்கு உத்தரவிட்ட நிலையில், ஐ.ஜி. அந்தஸ்தில் உள்ள நாகேஸ்வரராவை, சி.பி.ஐ. தற்காலிக இயக்குநராக நியமித்திருப்பது அதிகார துஷ்பிரயோகம் எனவும் ரஃபேல் ஊழல் புகாரை மறைக்கவே இந்த நடவடிக்கை என்ற சந்தேகத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருப்பதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

* முக்கிய வழக்குகள் மீது விசாரணை நடத்த வேண்டிய நிலையில், சி.பி.ஐ இயக்குநரை பிரதமர் மோடி மாற்றியிருப்பது உள்நோக்கம் கொண்டது என தெரிவித்துள்ள ஸ்டாலின், சி.பி.ஐ இயக்குநரை மாற்றிய உத்தரவை உடனடியாக பிரதமர், ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்