"குடிநீர் வாரியம் மூலம் தண்ணீர் வழங்க நடவடிக்கை" - அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

குடிநீர் இணைப்பு பெற இணையத்தளம் விண்ணப்பிக்கும் திட்டம் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடங்கி வைத்தார்
குடிநீர் வாரியம் மூலம் தண்ணீர் வழங்க நடவடிக்கை  - அமைச்சர் எஸ்.பி. வேலுமணி
x
குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு பெறுவதற்கான விண்ணப்பங்களை, ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் திட்டத்தை சென்னையில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாதவரம், மணலி, புழல், பெருங்குடி உள்ளிட்ட 24 பகுதிகளில் 30 ஆயிரத்து 300 குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 2 லட்சத்து 23ஆயிரத்து 600 குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட உள்ளதாகவும் கூறினார். தனியார் தண்ணீர் லாரிகள்  வேலை நிறுத்தத்தால் பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் மற்றும் நுகர்வோர்களுக்கு குடிநீர் வாரியம்வாரியம் மூலம் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்