சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை திறப்பு விழாவில் கலந்துகொள்ள தமிழக முதல்வருக்கு அழைப்பு

குஜராத் மாநிலத்தில் வரும் 31-ஆம் தேதி நடைபெறும் சர்தார் வல்லபாய் பட்டேல் உருவ சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை திறப்பு விழாவில் கலந்துகொள்ள தமிழக முதல்வருக்கு அழைப்பு
x
சென்னை தலைமைச் செயலகத்தில் குஜராத் மாநில அமைச்சர் கன்பத் சின்ஹா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் விழா அழைப்பிதழை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் நேரில் வழங்கினர். சர்தார் வல்லபாய் பட்டேலின் சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்