"ஆற்றுப்படுகை மேலாண்மை சட்டம் பயன் தராது" - அன்புமணி

காவிரி ஆணையத்தை முடக்குவதற்கான மேலாண்மை சட்டத்தை கைவிட வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.
ஆற்றுப்படுகை மேலாண்மை சட்டம் பயன் தராது - அன்புமணி
x
காவிரி ஆணையத்தை முடக்குவதற்கான மேலாண்மை சட்டத்தை கைவிட வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி வலியுறுத்தி உள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நதிநீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் ஆற்றுப் படுகை மேலாண்மை சட்டத்தை இயற்ற மத்திய அரசு தீர்மானித்துள்ளதாகவும் இது, காவிரி பிரச்சினையில்  தமிழகத்திற்கு தீங்கை ஏற்படுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


எனவே, காவிரி பிரச்சினையைப் பொறுத்தவரை ஆற்றுப்படுகை மேலாண்மை சட்டம் தேவையற்றது. அதற்கான சட்ட முன்வரைவை மத்திய அரசு கைவிட வேண்டும். மாறாக, காவிரி பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், அணைகளை கையாளும் அதிகாரத்தை காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு மத்திய அரசு வழங்க வேண்டும். அது தான் தமிழகத்துக்கு மத்திய அரசு செய்யும் நன்மையாக அமையும் என்றும் அன்புமணி தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்