சபாநாயகர் தனபாலை நீக்க கோரி கருணாஸ் மனு

சபாநாயகர் தனபாலை நீக்கக் கோரி எம்.எல்.ஏ கருணாஸ் சார்பில் சட்டப்பேரவை செயலரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது
சபாநாயகர் தனபாலை நீக்க கோரி கருணாஸ் மனு
x
* கருணாஸ் சார்பில் அவரது வழக்கறிஞர் வழங்கியுள்ள அந்த மனுவில், தமிழக சட்டமன்ற விதி 68ன்படி தீர்மானம் ஒன்றை கொண்டு வரவுள்ளதாகவும், அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

* சபாநாயகர் தனபால் ஒரு தலைபட்சமாக செயல்படுவதாகவும், அதன் காரணமாக பல சட்டமன்ற உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. 

* சட்டமன்ற மரபு மற்றும் அரசியல் சட்டத்தை மீறும் வகையில் சபாநாயகரின் செயல்பாடு உள்ளது எனவும்  குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, சட்டப்பேரவையை கூட்டி தீர்மானம் கொண்டு வந்து சபாநாயகரை நீக்க வேண்டும் என அந்த மனுவில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்