"எங்களோடு திருமாவளவன் நெருங்கி வருகிறார்" - அமைச்சர் ஜெயக்குமார்

எம்ஜிஆர் நுாற்றாண்டு விழாவுக்கு அழைப்பு விடுத்தால் வருவேன் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாளவன் கூறியிருப்பது தங்களுடன் நெருங்கி வருவதை காட்டுவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்
எங்களோடு திருமாவளவன் நெருங்கி வருகிறார் - அமைச்சர் ஜெயக்குமார்
x
எம்ஜிஆர் நுாற்றாண்டு விழாவுக்கு அழைப்பு விடுத்தால் வருவேன் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாளவன் கூறியிருப்பது தங்களுடன் நெருங்கி வருவதை காட்டுவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். முன்னாள் மேயர் சிவராஜின் 127 வது பிறந்த நாளையொட்டி சென்னை வள்ளலார் பகுதியில் அவரது திருவுருப்படத்திற்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ, மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், அரசு விழா என்பதால் அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுப்பது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முடிவு செய்வார் என கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்