அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஸ்டாலின் வீடு திரும்பினார்

சென்னை அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற திமுக தலைவர் ஸ்டாலின் வீடு திரும்பினார்.
அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஸ்டாலின் வீடு திரும்பினார்
x
வலது பக்க தொடையில் ஏற்பட்ட நீர்க்கட்டி காரணமாக, நேற்று இரவு 11 மணியளவில், திமுக தலைவர் ஸ்டாலின்,  சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
 
ஸ்டாலினுக்கு, மருத்துவர்கள் அருண் குமார், பாலகிருஷ்ணன் ஆகியோர் சிகிச்சை அளித்தனர். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அப்பலோ மருத்துவமனை நிர்வாகம், ஸ்டாலினுக்கு ஏற்பட்டிருந்த நீர்க்கட்டி, அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தது. இந்நிலையில், சிகிச்சை முடிந்ததால் இன்று பிற்பகல் 1.45 மணியளவில் ஸ்டாலின் வீடு திரும்பினார். 

Next Story

மேலும் செய்திகள்