துணிவிருந்தால் எங்கள் மீது வழக்கு போடட்டும் - ஸ்டாலின் சவால்

தி.மு.க. மீது குற்றம் சுமத்த முடியுமென்றால், நீதிமன்றத்தில் சென்று நிரூபித்துக் காட்டுங்கள் என திமுக தலைவர் ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்
துணிவிருந்தால் எங்கள் மீது வழக்கு போடட்டும் - ஸ்டாலின் சவால்
x
தி.மு.க. மீது  குற்றம் சுமத்த முடியுமென்றால், நீதிமன்றத்தில் சென்று நிரூபித்துக் காட்டுங்கள் என திமுக தலைவர் ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக அரசு மீது மக்கள் கொண்டுள்ள அதிருப்தியையும், கோபத்தையும் மறைக்க நினைத்து, தி.மு.க.வுக்கு எதிராகப் பொதுக்கூட்டம் நடத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார். ராஜபக்சே கூறியதை முழுமையாகக் கூடப் படித்து பார்க்காமல், தி.மு.க மீதும், காங்கிரஸ் மீதும் போர்க்குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்டனக் கூட்டம் நடத்தியிருப்பதாகவும் அதில் தெரிவித்துள்ளார். 

துரோகமும், ஊழலும் அ.தி.மு.க. என்ற அரசியல் நாணயத்தின் இரண்டு பக்கங்கள் தான் என்றும் அதில் ஒன்றை மறைத்தாலும் ஒன்று வெளிப்பட்டே தீரும் என்றும் அவர் கூறியுள்ளார். இதை  அறியாதவர்கள், தி.மு.க. மீது ஈழப் பிரச்சினைக்காகக் குற்றம் சுமத்தி, கண்டனப் பொதுக்கூட்டம் நடத்தியதை தமிழ்நாட்டு மக்கள் மட்டுமல்ல, இலங்கைத் தமிழ் மக்களும் ஒரு பொருட்டாகக் கூட நினைக்கவில்லை என ஸ்டாலின் விமர்சித்துள்ளார். 

குட்கா ஊழலை சட்டமன்றத்திலேயே ஆதாரத்துடன் நிரூபித்த கட்சிதான் திமுக என்றும் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக, ஆதாரப்பூர்வமாக செயல்பட்டு நீதிமன்றத்தை நாடியதால் தான், குட்கா ஊழல் இன்று சி.பி.ஐ. விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக ​ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அ.தி.மு.க. ஆட்சியின் ஒவ்வொரு ஊழல் தொடர்பாகவும் நீதிமன்றத்திற்கு தி.மு.க. சென்று கொண்டிருக்கிறது என்றும் தொடர்ந்து அந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

திமுக மீது குற்றம் சுமத்த முடியுமென்றால் அதை நீதிமன்றத்திற்கு சென்று நிரூபித்து காட்டுங்கள் என சவால் விடுத்துள்ள ஸ்டாலின், இலங்கைத் தமிழர்களின் பெயரால் அரசியல் லாபம் தேட முயற்சித்து, அதில் தி.மு.க. மீது ஊழல் புகார் சொல்வதும், தி.மு.க.வை ஒரு கம்பெனி எனப் பேசுவதும் கண்டனத்திற்குரியது என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார் 


Next Story

மேலும் செய்திகள்