ஸ்டெர்லைட் ஒரு சுற்றுச்சூழல் நாசகார தொழிற்சாலை - வைகோ

ஸ்டெர்லைட் நிறுவனம் தூத்துக்குடியில் இருந்து ஆட்களை கொண்டுவந்திருந்தது என வைகோ கூறினார்.
ஸ்டெர்லைட் ஒரு சுற்றுச்சூழல் நாசகார தொழிற்சாலை - வைகோ
x
ஸ்டெர்லைட் ஆலையை மூடும் உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், 3 பேர் கொண்ட குழுவை அமைத்து, ஆறு வாரத்துக்குள் அறிக்கை அளிக்க உத்தரவிட்டது. அதன்படி, ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழுவினர், தூத்துக்குடியில் கடந்த 2 நாட்களாக ஆய்வு நடத்தினர். இதையடுத்து, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் இன்று அந்த குழுவின் விசாரணை நடைபெற்றது. அதில், வேதாந்தா குழும தரப்பினர், மாசு கட்டுப்பாடு மற்றும் நிலத்தடி நீர் ஆணைய அதிகாரிகள், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதுபோல, ஸ்டெர்லைட் ஆலையை மூடியதால் 5 ஆயிரம் பேருக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி, ஆலைக்கு ஆதரவானவர்களும் மனு அளித்தனர். இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான அடுத்தகட்ட விசாரணையை, வரும் -ஆம் தேதிக்கு, குழுவினர் ஒத்திவைத்தனர். இரு தரப்பினரிடம் நடத்தும் முழுமையான விசாரணைக்கு பிறகு, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில், இந்த குழுவினர் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளனர். 

"ஸ்டெர்லைட் ஒரு சுற்றுச்சூழல் நாசகார தொழிற்சாலை"

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வைகோ, ஸ்டெர்லைட் தரப்பு வழக்கறிஞர் பல்வேறு வாதங்களை எடுத்து வைத்தார். ஸ்டெர்லைட் நிறுவனம் தூத்துக்குடியில் இருந்து ஆட்களை கொண்டுவந்திருந்தது எனவும் போராடுபவர்களை பற்றி தவறான வார்த்தையை வழக்கறிஞர் கூறினார் என்றும் தெரிவித்தார். மேலும் ஸ்டெர்லைட் ஒரு சுற்றுச்சூழல் நாசகார தொழிற்சாலை என கூறியதாகவும் தெரிவித்தார்.



Next Story

மேலும் செய்திகள்