20ஆம் தேதி கூடுகிறது அதிமுக செயற்குழு

அதிமுக செயற்குழு வரும் 20ந்தேதி நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
20ஆம் தேதி கூடுகிறது அதிமுக செயற்குழு
x
அதிமுக செயற்குழு கூட்டம் வரும் 20 ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான  பன்னீர்செல்வம், அக்கட்சி இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான பழனிசாமியும் இது தொடர்பாக கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.    

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் வரும் 20ந்தேதி மாலை 4 மணிக்கு செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் இக்கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்